2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டு காரியாலயம் திறந்து வைப்பு

Thipaan   / 2014 நவம்பர் 03 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


கற்பிட்டி பிரதேச ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயற்பாட்டு காரியாலயம்  பிரதியமைச்சர் விக்டர் அன்டனியினால் நுரைச்சோலை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டது.

கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சிலர் சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவை 3ஆவது தடவையாகவும் ஜனாதிபதியாக்க அனைவரும் ஒன்று பட்ட செயல்பட வேண்டுமென தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில், முதல் முதலாக நுரைச்சோலையில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமையானது ஜனாதிபதிக்கு வழங்கும் கௌரவம் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X