2025 மே 09, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்ற கிராமத்தில் புதிய வாசிகசாலை

Thipaan   / 2014 நவம்பர் 04 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் தில்லையடி சதாமியா புரம் மீள்குடியேற்ற கிராமத்தில், மக்கள் நற்பணி மன்றத்தால் அமைக்கப்பட்ட புதிய வாசிகசாலை திங்கட்கிழமை (03) காலை  திறந்து வைக்கப்பட்டது.

மக்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.முயீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சதாமியா புரம்  அரபு மத்ரசா அதிபர் அஷ்ஷெய்க் அப்துல் மலிக், பிரதேச கிராம சேவையாளர்.எம்.எம். மிப்ராஸ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இடம்பெயர்ந்த மக்கள் வதியும் இந்த பிரதேசத்தில் இதுவரை காலமும் வாசிகசாலையொன்று இல்லாமல் இருந்த குறை, இதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X