2025 மே 09, வெள்ளிக்கிழமை

சிலாபத்தில் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 நவம்பர் 07 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்

கடந்த வாரம் பெய்த கடும் மழையால் சிலாபம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மைக்குளம் பிரதேசத்தில், அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் அப்பகுதியில் வெள்ள நீர் வழிந்தோடக்கூடிய வழிவகைகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து அப்பிரதேச மக்கள் இன்று (070 பகல் சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இது சம்பந்தமாக தெரிவித்து நேற்றும் (06) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கரவிட்ட, முன்னேஷ்வரம் மற்றும் பனன்குடா நல்லநாலயம் ஆகிய நீர் நிலைகளிலிருந்து வெளியேறும் நீர், சிலாபம் கலப்பை தாண்டி மைக்குளம் கிராமத்தின் ஊடாகவே செல்கின்றது.

இந்நீர் வழிந்தோடும் கால்வாய் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த கால்வாயினை உடனடியாக சீர் செய்து வெள்ளநீர் விரைவாக வழிந்தோட ஆவன செய்யுமாறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் முன்வைத்தனர்.

இதன்போது, சிலாபம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X