2025 மே 09, வெள்ளிக்கிழமை

நீல படையணி இளைஞர் அமைப்பின் புனரமைப்பு கூட்டம்

Thipaan   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன், ரஸீன் ரஸ்மின், எம்.என்.ஹிஜாஸ்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி  நீல படையணி இளைஞர் அமைப்பின் புனரமைப்பு கூட்டம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்றது.

புத்தளம் நகர முதல்வரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நீல படையணி இளைஞர் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, தென்னை தோட்ட அபிவிருத்தி பிரதி அமைச்சர் விக்டர் என்டனி, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா, மாகாண சபை உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இளைஞர் அமைப்பின் புனரமைப்பு கூட்டத்தில் பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டதோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள்,  நீல படையணி இளைஞர் அமைப்பில் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X