2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் படுகாமயடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2014 நவம்பர் 09 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய நபர் சனிக்கிழமை(9) அதிகாலை சிகிச்சை பலனின்னிற உயிரிழந்தள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.   

கெக்கிராவை ஊத்துப்பிட்டிப் பிரதேசததைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொல்கஹவெல பகுதியில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற வான் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மேற்படி நபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பஸ்ஸும் இவர் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X