2025 ஜூலை 17, வியாழக்கிழமை

லொறி உரிமையாளர்கள், சாரதிகள் பணிபகிஷ்கரிப்பு

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன்களில் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட பொதிகளை புத்தளம் நகருக்கு நேரடியாக கொண்டு வருவதால், தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்படுவதாக தெரிவித்து லொறி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இன்று சனிக்கிழமை (15) காலை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

புத்தளம்- மன்னார் வீதியில், லொறிகளில் ஏற்றப்பட்டிருந்த மூடைகளை கடைகளுக்கு இறக்காமல் புத்தளம், மதுரங்குளி பிரதேச லொறி சாரதிகளும், உரிமையாளர்களும் பணி  பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கொழும்பிலிருந்து புத்தளம் நகருக்கு, ஒரு மூடையை 70 ரூபாய் வீதம் தாம் கொண்டு வருவதாகவும், ஆனால், மொத்த வியாபாரிகள் கொள் கலன்களில் ஒரு மூடை 48 ரூபாய்க்கு கொண்டு வருவதால் தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்படுவதாக பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது தவிர புத்தளத்திலிருந்து கொழும்புக்கு லொறிகளில் பாரம் ஏற்றி  செல்பவர்கள் அங்கிருந்து வெறுமனே வராமல் ஒரு மூடைக்கு 50 ரூபாய் வீதம் ஏற்றி வருவதாலும் தாம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பணிபகிஸ்கரிப்பளர்கள், கொள்கலன்களில் புத்தளம் நகருக்கு நேரடியாக பொருட்களை கொண்டு வரும் மொத்த வியாபாரிகளை அணுகி தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெரிவித்தபோது கொள்கலன்களில் கொண்டு வரும் மூடைகளை லொறி உரிமையாளர்களுக்கு பிரித்து வழங்குவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து பணிபகிஸ்கரிப்பை கைவிட்டனர்.      






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X