2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கு போட்டி இல்லை: நெரஞ்சன் விக்கிரமசிங்க

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளரின்றி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. ஜனாதிபதிக்கு இந்த தேர்தல் பெரிய போட்டியாக இருக்கப் போவதில்லை.

நாட்டை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றி அமைப்பதற்கு நாங்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து மீண்டும் எமது நாட்டுக்கு  சுபீட்சதையும் போர்க்கால சூழலிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த மஹிந்த ராஜபக்ஷவை பெற்றிபெறச் செய்வோம் என்று குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவத்தகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான நெரஞ்சன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு மாவத்தகம தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் கிளைக் காரியாலயத்தில் நேற்று (14) மாலை 6.30  மணியளவில் இக் கூட்டம் இடம்பெற்றது. மாவத்தகம பிரதேச சபைத் தவிசாளர் உபுல் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவத்தகம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான நெரஞ்சன் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கையில் பாரிய அபிவிருத்தி வேலைப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதிவேக நெடுஞ்சாலை வீதி முதல் உள்ளூர் வீதிகள் யாவும் எமது கண்முன் பாரியளவிலான அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எமது மாவத்தகம நகரிலும் பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2300 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மகாவலி ஆற்று நீரை மாவத்தகம வரை எடுத்து வந்து 2500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது போல எண்ணற்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாவது தடவையாக வெற்றிபெறச் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X