2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பாதை திறந்து வைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 15 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தில்லையடி ரத்மல்யாய இரண்டாம் குறுக்குத்தெருவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பாதை வெள்ளிக்கிழமை (15) மாலை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகர முதல்வரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், புத்தளம்   நகர பிதா பாயிஸின் இணைப்பாளர் எம்.முயீன், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதேசத்திலுள்ள மக்களிடம் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த  நகர முதல்வர், அப்பிச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் மக்களிடம் உறுதி அளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X