2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வைத்தியர் இன்மையால் பல்வேறு அசௌகரியம்

Kogilavani   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.சியாம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான வைத்தியர்கள் இன்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேசிரி அத்தப்பத்து தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு 69 வைத்தியர்கள் தேவைப்படுவதுடன் 34 வைத்தியர்களே கடமையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவு ஐந்து பிரிவுகளாக செயற்படுகின்றது

வைத்தியர்கள்  குறைபாட்டால் நோயாளிகளுக்கு உரிய தினத்தில் சிகிச்சை மேற்கொள்வது பாரிய பிரச்சினையாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் கவனத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X