2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் பொத்துவில் சிங்கள அரசினர் வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் புதன்கிழமை (19) காலை புத்தளம் வலய கல்விப்பணிமனைக்கு முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

275 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில், அதிபர் உட்பட 08 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுவதாக தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள், 01ஆம் தரம் தொடக்கம் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி பயிலும் தமது பிள்ளைகளின் கல்வி தேவைகள் நிறைவேற்ற முடியாமல் உள்ள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு  அறிவித்து ஜனாதிபதி அவர்களின் மூலமாக, இவ்விவகாரத்தை தீர்த்து வைக்குமாறு சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் வந்த போதிலும் இது வரை இப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X