2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கலாஓயாவின் நீர்மட்டம் உயர்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 28 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கலாஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், எழுவன்குளம் ஊடான புத்தளம் - மன்னார் வீதி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

நேற்று வியாழக்கிழமை  பெய்த  அடை மழை காரணமாக  இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் தலா 02 அடி வரையிலும் தெதுறுஓயாவின் 3 வான்கதவுகள் தலா 02 அடி வரையிலும் திறந்து விடப்பட்டுள்ளன.  இராஜாங்கனையின் நீர் கலாஓயாவுக்கு  திருப்பப்பட்டுள்ளதால் கலாஓயாவின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளத்தில் மேலும் சில இடங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் புத்தளம் அட்டவில்லு பிரதேசத்தில் வீடுகள் பல வெள்ள அனர்த்தத்துக்கு  உள்ளாகியுள்ளதுடன்,  வெள்ளநீர் வழிந்தோடுவதற்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புத்தளம்  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X