2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தொடர்மழையால் புத்தளம் மாவட்டத்தின் இயல்புநிலை ஸ்தம்பிதம்

Thipaan   / 2014 நவம்பர் 30 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தில் தொடர்ந்து  பெய்து வரும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தின் பல தாழ்நிலப்பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புத்தளம் மாவட்டத்திலுள்ள ஆழ்கடல் கொத்தளிப்பாக காண்ப்படுவதினால் உடப்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் மீனவர்கள் இன்று கடற்றொழிக்குச் செல்லவில்லை.

மேலும் இங்கினிமிட்டிய நீர்த் தேக்கதின் 4 வான் கதவுகள் 7 அடிக்கும் தெதுறு ஓயாவின் 2 வான் கதவுகள் 2அடிகளுக்கும் இராஜங்கனை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 4 அடிக்கும் மற்றும் தப்போவ நீர் தேக்கத்தின் 3 வான் கதவுகள் 6 அடிக்கும்     திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கலா ஓயா தப்போவ மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர் தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ள நீர் காரணமாக புத்தளம்-மன்னார் பிரதான வீதியின் எலுவான்குளம் கங்கேவாடிப் பகுதியில் உள்ள பாலத்தின் ஊடாக  அதிக வெள்ள நீர் பாய்வதின் காரணமாக தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம்  மேலும் தெரிவித்துள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X