2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு

Kanagaraj   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

குருணாகல், பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருணாகல், பிரதேச சபையின் உறுப்பினர் விதானகே ரோஹன தன்னை அச்சுறுத்தியதாக மாஸ்பொத பிரதேசத்தில் வசிக்கும் நிலான் இந்திக்க என்பவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மாலை ரத்கரவ்வ பிரதேசத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான ஒருவரை பார்வையிட குருணாகல்  வைத்தியசாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இவ் அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அரசியலுடன் சம்பந்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட பிரச்சினையா என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X