2025 மே 08, வியாழக்கிழமை

புத்தளத்தில் ஜனாதிபதியின் முதல் பிரசார கூட்டம்

Gavitha   / 2014 டிசெம்பர் 14 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கான முதல் பிரசார கூட்டம், நீலப்படை அணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ நாமல் ராஜபக்ஷவினால் சனிக்கிழமை (13) புத்தளத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான புத்தளம் பிரதேச நீலப்படையணியினருடன் இணைந்தே இக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸின் அழைப்பின் பேரில் இவ்விஜயத்தை மேற்கொண்டு, புத்தளம் தொகுதியின் கீழுள்ள பாலாவி பிரதேச கட்சி காரியாலயத்தையும் இதன்போது திறந்து வைத்தார்.

மேலும் புத்தளத்திலுள்ள முக்கிய வியாபார மற்றும் பல்வேறு இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X