2025 மே 08, வியாழக்கிழமை

குருநாகலில் சீரற்ற காலநிலை தொடர்கிறது

Gavitha   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளதாகவும் இதனால், பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல்-கண்டி பிரதான வீதியில் கலகெதரப் பகுதியில் அங்காங்கே ஏற்பட்ட மண் சரிவால், குருநாகல்-கண்டி  போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. மாவத்தகம 9ஆம் மைல் கல்லுக்கருகிலுள்ள ஆறு,  பாலத்தின் மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பறகஹதெனியா பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 50 வீடுகள் வெள்ளநீரிழ் மூழ்கியுள்ளன. வீதிபோக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களை குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் மாவத்தகம பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X