2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மு.கா. ஆதரித்த கட்சிகள் தோல்வியையே சந்தித்தன: பசில்

Kogilavani   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


'கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிஸ் ஆதரித்த அனைத்து கட்சிகளும் தோல்வியையே சந்தித்தன. ஆனால் அவர்கள், ஆதரிக்கும் கட்சியை தோற்கடித்துவிட்டு மீண்டும் ஆளும் கட்சியில் வந்து சேர்ந்து விடுவார்கள். இம்முறை நாம் வெற்றிபெற்றதும் அது நடக்காது' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை(28) மாலை விஜயம் செய்த அமைச்சர், விருதோடை பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண முஸ்லிம்களை தங்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றியதும் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்ததும் நான்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர் பௌஸி, அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, பிரதியமைச்சர் விக்டர் அன்டனி, உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X