2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அதிக ஆசை காரணமாகவே மைத்திரி கட்சி தாவினார்: அனுர

Gavitha   / 2014 டிசெம்பர் 31 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

மைத்திரிபால சிறிசேன, எதிரணிக்கு சென்றது அதிக ஆசை மற்றும் பொறுமையின்மையினாலாகும். அவர் பிரதமர் பதவி தனக்கு விரைவில் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார். அப்படி நடக்காத போது எதிரணிக்கு சென்று ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (30) மாலை நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மைத்திரிபால சிறிசேன, பொருளாதாரம் தொடர்பான அடிப்படை அறிவில்லாதவராவார். அவரிடம் பொருளாதாரத்ததில் கூறப்படும் கேள்வி, நிரம்பல் தொடர்பாக வினவுங்கள். அதற்கு அவருக்கு பதில் கூறத் தெரியாது. அவிரிடமா நாட்டை ஒப்படைப்பது? மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்கள் பன்னிரண்டு பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொலன்னறுவை பிரதேசத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்குள்ள விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருகின்றனர்.

நல்லாட்சியைப்பற்றிப் பேசி வரும் எதிரணியில் இருப்பவர்கள் யார்? ரணில் விக்கிரமசிங்க அன்று பட்டலந்த வதை முகாமை நடத்தியவர். ரிஷாத் பதியுதீன், அஸ்வர் எம்.பி.யின் நாடாளுமன்ற பதவியை தனது கட்சிக்கு பெற்றுக் கொண்டு எதிரணிக்குத் தாவியவராவார்.

ரஹுப் ஹக்கீம் ஏன் அரசாங்கத்தை விட்டுச் சென்றார்?  கிழக்கில் முஸ்லிம் பரிபாலன அலகைக் கேட்டார்? அதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை. அதனால் எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றார்;.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X