2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வென்னப்புவ படுகொலை: காவலாளியும் மனைவியும் கைது

Kanagaraj   / 2015 ஜனவரி 03 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ நயினாமடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் நால்வர் படுகொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் கடமையாற்றிய காவலாளியும் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் கலேவெலயைச்சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தை மற்றும் அவர்களுடைய  மூன்று நாட்கள் சிசு மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை ஆகிய இருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம்  திகதி சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவம் 31ஆம் திகதி இரவு அல்லது முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் நால்வரும் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது வீட்டுத் தோட்டத்தில் குழியொன்றுக்குள் போட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தும்புத் தொழிற்சாலையின்  உரிமையாளரும் மாரவில வைத்தியசாலையில் வைத்தியராகப் பணியாற்றி வரும் அவருடைய மனைவியும் அவர்களது பிள்ளைகள் இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

வீட்டுக்காவலாளி, முதலாளியின் ஐந்து வயதான மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கே முழுக்குடும்பத்தையும் அவர், கொலைச்செய்திருப்பதாக  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X