2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பெண்ணொருவரை காணவில்லை என்று முறைப்பாடு

Gavitha   / 2015 ஜனவரி 14 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் நகரைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரை கடந்த சனிக்கிழமை (10) முதல் காணவில்லை என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மரிக்கார் வீதி, புத்தளத்தில் வசிக்கும் பாத்திமா ரினூஷா (வயது 26) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகள், திருமணம் முடித்து 3 மாதங்கள் ஆகின்றது என்றும் இறுதியாக அவர் சல்வார் அணிந்து இருந்தார் என்றும் காணாமல் போன பெண்ணின் தந்தை எம்.ஓ.ஏ. லதீப் தெரிவித்துள்ளார்.

இவர் தொடர்பான விவரங்கள் தெரிந்தவர்கள், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0777-868-699  என்ற அலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பை ஏற்படுத்தி தெரிவிக்கும் படி புத்தளம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X