2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Thipaan   / 2015 ஜனவரி 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

வென்னப்புவ உல்ஹிட்டியாவ எனும் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை(24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

உல்ஹிட்டியாவ வெல்ல வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் உல்ஹிட்டியாவ, மஹபாடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியொன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த சைக்கிளில் பயணித்த நபர், மாரவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டிச் சாரதியை வென்னப்புவ பொலிஸார்; கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X