Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜனவரி 30 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
முஸ்லிம்களை நையாண்டி பண்ணி பிரான்ஸில் வெளிவரும் சார்லி ஹப்டோ பத்திரிகைக்கும் அதில் வெளியான கார்டூன்களுக்கு எதிராகவும் கண்டித்து குருநாகல் நகரிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குருநாகல் பஸார் வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதங்களை நிந்திக்காதே, பிரான்ஸ் நாட்டுப் பொருட்களைத் தடை செய், ஊடக சுதந்திரத்தை இழிவு படுத்தாதே, அல்லாஹ். நபி (ஸல்) அவர்களை இழிபடுத்துபவர்களை நாசம் பண்ணிவிடு போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், நசார் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு இது தொடர்பாக மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago