Thipaan / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். எஸ். முஸப்பிர்
சட்டவிரோதமாக 28 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கார் ஒன்றில் கொண்டுசென்றிருந்த ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் சாலியவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அரசினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும் தினங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கிலேயே சந்தேக நபர் இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு கார் ஒன்றிலேயே சந்தேக நபர் இம்மதுபான போத்தல்களை எடுத்துச் சென்றிருந்துள்ளதுடன், இதற்கு முன்னர்; இதே காரில் கஞ்சா கொண்டு சென்ற போது இவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
இந்த கார் தொடர்பில் நீதிமன்றத்துக்;கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
சாலியவௌ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாபா குமாரசிங்க தலைமையிலான குழுவினர், இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025