Princiya Dixci / 2015 மார்ச் 12 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
வெட்டப்பட்டுக் கொண்டிருந்த தென்னை மரம் விழுந்ததில் இளம் குடும்பஸ்தர், புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மரங்கள் வெட்டும் தொழில் செய்துவரும் கொத்தாந்தீவு சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் காதர் முஹம்மது பஸ்லிம் (வயது 35) எனும் இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் சிலருடன் இணைந்து மரங்கள் வெட்டும் தொழில் புரிந்து வந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை, இவருடன் வேலை செய்யும் சிலருடன் புழுதிவயல் பிரதேசத்தில் தென்னை மரம் வெட்டிக்கொண்டிருக்கையில் அம்மரம் வேறொரு மரத்தில் விழுந்து இவர் மீது வீழ்ந்துள்ளது.
உடனடியாக இவர் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவரின் மரண விசாரணை புத்தளம் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் முன்னிலையில் இடம்பெற்ற போது மரம் உடலில் வீழ்ந்ததால் உடலினுள் அதிகமான காயங்கள் ஏற்பட்டு இம்மரணம் சம்பவித்ததாக அறிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
53 minute ago