Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 23 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஸட். ஷாஜஹான்
இந்த வருடம் நூற்றாண்டு விழா காணும் இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின் ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் நீர்கொழும்பு தலைவர் ஐ.ஏ.அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மௌலவி எம்.ஏ. அஸ்மத் அஹ்மத், ஜமாஅத்தின் தேசிய பிரசாரச் செயலாளர் அப்துல் ஹஸீஸ், எஸ்.ஏ.தாரிக், ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்வில் உர்து நஸம் (கீதம்;), கஸீதா என்பனவும் இடம்பெற்றன.
அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இலங்கையில் அமைக்கப்பட்டு இந்த வருடம் நூறாண்டுகள் பூர்த்தி அடைவதையிட்டு, இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளதாக ஜமாஅத்தின் தேசிய பிரசாரச் செயலாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
55 minute ago
9 hours ago