2025 மே 09, வெள்ளிக்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உட்பட எட்டு பேர் கைது

Sudharshini   / 2015 மார்ச் 23 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவாசல் பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உட்பட எட்டுப் பேரை கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது அங்கு சிலர் ஒன்று சேர்ந்து பணத்தைப் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் சூதாட்டத்தில் ஈடுபட்டடிருந்த நான்கு பெண்கள் உட்பட எட்டு பேரில், தாயும் மகளும் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேற்படி சந்தேக நபர்கள் எட்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X