Sudharshini / 2015 மார்ச் 25 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தேர்தல் தொகுதியின் பள்ளிவாசல்துறை, முசல்பிட்டி, முதலைபாளி மற்றும் ரெட்பானா போன்ற பிரதேசங்களின் கடற்கரையை அண்மித்த பகுதிகளிலுள்ள சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதர் ஒருவரது பெயருக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது பிரதேசத்துக்குள் சுதந்திரமாக சென்றுவர முடியாத நிலை காணப்படுவதாக பிதேசவாதிகள், தமக்கு முறையீடு செய்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச பொது மக்களின் முறையீட்டையடுத்து, கடந்த திங்கட்கிழமை (23) இவ்விடயம் தொடர்பில் நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.
அப்பகுதியில், 'அனுமதியின்றி உட்பிரவேசிக்க வேண்டாம்' என்ற பெயர் பலகை அங்கு காணப்படுகிறது. அழகிய அந்த கடற்கரை பிரதேசங்களில் ரம்மியமான காலை மற்றும் மாலை காட்சிகளை இரசிக்க முடியாமல், இயற்கை காற்றினை சுவாசிக்க முடியாதுள்ளதென பிரதேச மக்கள் பெரிதும் அங்கலாய்க்கின்றனர்.
இதுதவிர குறித்த பிரதேசங்களில் ஏற்கனவே மீன்பிடி நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டிருந்தமைக்கான தடையங்கள்; காணப்பட்டன. என்றாலும், அச்சுறுத்தல் காரணமாக குறித்த பிரதேசங்களுக்கு தாம் செல்வதில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமது சொந்த பிரதேசங்களில் தாம் சுதந்திர காற்றினை அனுபவிக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மகஜர்களை அனுப்பியுள்ளதோடு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அதன் பிரதி ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
40 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago