Gavitha / 2015 மார்ச் 26 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்
புத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள அரபுக்கல்லூரியிலிருந்து தப்பிச்சென்று புத்தளம் புகையிர நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஐந்து சிறுவர்களையும் புதன்கிழமை (25) மீட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் புகையிரத நிலையத்திலிருந்த அதிகாரிகள், புத்தளம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இச்சிறுவர்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
15, 13 மற்றும் 10 வயதுகளையுடைய இச்சிறுவர்கள் ஐந்து பேரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அரபுக்கல்லூரியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து புதன்கிழமை (25) காலை தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இச்சிறுவர்கள் நேற்று வண்ணாத்திவில்லு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
51 minute ago