2025 மே 09, வெள்ளிக்கிழமை

செய்தியாளர் மீது தாக்குதல்: ஒருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 மார்ச் 26 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளத்தைச் சேர்ந்த சகோதரமொழி செய்தியாளரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதானவரை நாளை மறுதினம் (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிடடுள்ளார்.

பாலாவி பிரதேசத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய காணி ஒன்றில் அத்துமீறி நுழைந்த குழுவினர், அங்கு கம்பி வேலி; அமைப்பதில் ஈடுபட்டனர். இதனையறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அக்குழுவினர் தாக்கிவிட்டு தலைமறைவாகினர்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை(23) இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் சகோதரமொழி செய்தியாளரான ஹிரான் பிரியங்கர ஜயசிங்க என்பவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபரை பொலிஸார் நேற்று புதன்கிழமை(25) கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X