2025 மே 07, புதன்கிழமை

தனியார் பஸ் உரிமையாளர்கள் விசனம்

Sudharshini   / 2015 மே 05 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஊடாக மன்னார்-கொழும்பு மற்றும் வவுனியா-கொழும்பு மார்க்த்தில் சேவையில் ஈடுபடும் பஸ்கள், புத்தளம் நகரிலுள்ள பஸ் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதால் தாம் பெரிதும் பாதிப்படைவதாக, புத்தளம்-கொழும்பு மார்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பழைய நூலக கட்டடத்துக்கு முன்பாக தரித்து  நிற்கும் பயணிகள், தாம் விரைவாக கொழும்பு நகரை சென்றடையும் நோக்கில் நிலையத்துக்கு வரும் பஸ்களில் ஏறிச் செல்கின்றனர்.இத்தகைய செயற்பாடுகளினால் தமது பாதிப்புக்குள்ளாவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செயற்பாட்டை தடை செய்யுமாறு வலியுறுத்தி தனியார் பஸ் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை பஸ்களை வீதியில் நிறுத்தி தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர். இதேவேளை கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாரிடமும்; இது தொடர்பாக முறைப்பாடு செய்தனர்.

இது குறித்து புத்தளம் பஸ் நிலையத்தின் தனியார் பஸ்களுக்கான பொறுப்பதிகாரி எம்.எச்.எம். அமீஸிடம் வினவியபோது,
இந்த பஸ்களுக்கு புத்தளம் அனுராதபுர வீதி ஊடாகவே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் பஸ் நிலையத்திலுள்ள பயணிகளை ஏற்றி செல்வதால் இங்கிருந்து கொழும்பு  பயணிக்கும் பஸ்கள் பயணிகள் இல்லாத நிலையில் பயணிக்க வேண்டியுள்ளது.; புத்தளம் நகர சபை இது குறித்த கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X