2025 மே 07, புதன்கிழமை

பாடசாலை வான் விபத்துக்குள்ளானதில் நால்வர் காயம்

Sudharshini   / 2015 மே 06 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் போலவத்தை அங்கம்பிட்டி பிரதேசத்தில் வைத்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த  வான் ஒன்று  வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதெனவும் விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்த பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரும், பொது மகன் ஒருவரும் விபத்தில் காயமடைந்துள்ளனர். எனினும் குறித்த வானில் பயணித்த மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு கட்டுவை பிரதேசத்திலிருந்து வென்னப்புவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வானின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கு  காரணம் என ஆரம்பக்கட்டட விசாரணைகளிலிரந்து தெரிய வந்துள்ளது.  

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X