Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 07 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரம்பை சபாமர்வா மீள்குடியேற்றக் கிராமத்திலுள்ள வீட்டுக் கிணறொன்றினுள் தவறி விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
உமர் பாறூக் பாத்திமா றிஸ்னா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை தனது வீட்டிலிருந்த அயல் வீடொன்றுக்குச் சென்றுள்ள இந்தக் குழந்தை அங்குள்ள தாழ்வான கிணற்றினுள் விழுந்துள்ளது.
இந்தக் குழந்தையை நீண்டநேரமாக காணவில்லை என்று வீட்டிலுள்ளவர்கள் தேடியபோது, கிணற்றினுள் குழந்தை விழுந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago