2025 மே 07, புதன்கிழமை

பேரீச்சம் பழங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாவட்ட பள்ளிவாசல்களுக்கு புனித நோன்பு காலத்தில் நோன்பாளிகளுக்கு வழங்குவதற்கென பேரீச்சம் பழங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு புத்தளம் நகரில் சனிக்கிழமை (09) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள ஐ.தே.கட்சியின் காரியாலயத்தில் வைத்து புத்தளம் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி இந்த பேரீச்சம்பழ விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

இம்முறை புத்தளம் மாவட்ட பள்ளிவாசல்களுக்கு வழங்குவதற்கென புத்தளம் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியிடம் பேரீச்சம்பழங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீமினால் வழங்கப்பட்டுள்ள 17 ஆயிரம் கிலோ பேரீச்சம்பழங்களை மாவட்டத்தின் சகல பள்ளிவாசல்களுக்கும் உரிய முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X