2025 மே 07, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபருக்கு வலைவீச்சு

Gavitha   / 2015 மே 10 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நைனாமடம, முட்டுவ பிரதேசத்தில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி விட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நைனாமடம, முட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கடந்த மாதம் 28ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்ததையடுத்து  சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக மாரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (07)  மாரவில வைத்தியசாலையினால் வெளியிடப்பட்ட வைத்திய அறிக்கையின்படி சிறுமியை பொலிஸார் விசாரணை செய்தபோது, சந்தேக நபர் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து பல மாதகாலமாக துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இது தொடர்பாக எவரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் சிறுமி பொலிஸாருக்கு வாக்கு மூலமளித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது, சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது குறித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X