2025 மே 07, புதன்கிழமை

பரிசளிப்பு விழா

Sudharshini   / 2015 மே 13 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு விவேகானந்தா நலன்புரி நிலையத்தின் ஏற்பாட்டில், கொச்சிக்கடை விவேகானந்தா அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.

நீர்கொழும்பு விவேகானந்தா நலன்புரி நிலையத்தின் தலைவர் சி. கணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் திருமதி தேவகுமாரன் ஹரன்; , நுவரெலியா கல்வி வலயத்தின் உதவிப் பணிப்பாளர் செல்வி பாமினி செல்லத்துரை  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்; இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X