Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 மே 14 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக புத்தளம் நகர பொது மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட சுத்தமான குடிநீர் போத்தல்கள், புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தாவிடம் புதன்கிழமை (13) மாலை கையளிக்கப்பட்டன.
கடந்த வாரம் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தை தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளியை மையமாக கொண்டு புத்தளம் பௌத்த மத்திய நிலையம், புத்தளம் இந்து ஆலயம், புத்தளம் கத்தோலிக்க தேவாலயம் ஆகியன இணைந்து நிதி வசூத்தன.
புத்தளம் நகர மக்களிடம் சேகரிக்கப்பட்ட சுமார் மூன்று இலட்சம் ரூபாவுக்கு பெறப்பட்ட 10 ஆயிரம் லீற்றர் சுத்தமான குடி நீர் போத்தல்கள் இதன் போது மாவட்ட செயலாளரிடம் புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம். ஜனாப், செயலாளர் ஜே.இசட்.எம். நாஸிக், பொருளாளர் ஏ.என்.எம். ஜவ்பர் மரிக்கார் உள்ளிட்ட உறுப்பினர்கள், புத்தளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர் விஸ்வ பிரம்மஸ்ரீ எம். தயானந்த், புத்தளம் இந்து மகா சபை நிர்வாக உறுப்பினர் ஆர். மனோகரன் ஆகியோர் இணைந்து இந்த குடிநீர் போத்தல்களை கையளித்தனர்.
புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயகவும் இந்நிகழ்வின் போது பிரசன்னமாயிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago