Thipaan / 2015 மே 19 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
சிலாபம்- கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் மெரவல புகையிரத கேட்டுக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூடைகள் ஏற்றப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்று தானாக புரண்டு அருகில் உள்ள கால்வாயினுள் திங்கட்கிழமை (18) வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் சீமெந்து தொழிற்சாலையிலிருந்து 400 சிமெந்து மூடைகளுடன் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தை வீதிக்கருகில் நிறுத்தி வைத்து விட்டு அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தேனீர் அருந்துவதற்காக அங்கிருந்த கடைக்கு சென்றபோது, இவ்வாகனம் தானாகப் புரண்டு கால்வாயினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக அதன் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago