2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

Thipaan   / 2015 மே 20 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

தனியார் பஸ்ஸில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த  மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகமை வீதி,; கட்டுவபிட்டிய சந்தியில் வைத்து  சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவனொருவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை விபத்துக்குள்ளானான்.

நீர்கொழும்பு , மஹ ஹுனுபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய நிபுன சாமிக்க என்ற மாணவனே சம்பவத்தில் படுகாயமடைந்தவனாவான்.

இந்த மாணவன் பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கும் போது இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மாணவனின் இடது கை பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து கட்டானை பொலிஸார் தனியார் பஸ் சாரதியை கைது செய்துள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X