Suganthini Ratnam / 2015 மே 20 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.முஸப்பிர்
பல பிரதேசங்களிலுமுள்ள வீடுகளில் திருடியும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை திருடியும் வந்ததாகக் கூறப்படும் வென்னப்புவ சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த சந்தேக நபர்களிடமிருந்து நான்கு மோட்டார் சைக்கிள்கள், சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகள், இலத்திரனியல் உபகரணங்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் பிரதேச செயலாளர் ஒருவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் தங்கொட்டுவை பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து வென்னப்புவ, தங்கொட்டுவை, கொச்சிக்கடை போன்ற பிரதேசங்களில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களின் திருட்டு பற்றிய விவரங்களை பெறமுடிந்தது.
அத்துடன், மேற்படி பிரதேசங்களிலுள்ள நான்கு வீடுகளில் தங்கநகைகள், பணம், இலத்திரனியல் உபகரணங்களை திருடி அவற்றை விற்று பணம் பெற்றதாகவும் இந்த செயற்பாடுகளுக்கு தன்னுடன் மேலும் மூவர் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து வென்னப்புவ, தங்கொட்டுவை பிரதேசங்களில் வசிக்கும் ஏனைய மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் திருட்டின் மூலம் பெற்ற பணத்தை போதைப்பொருள் பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதுடன், சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago