2025 மே 07, புதன்கிழமை

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2015 மே 20 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, புத்தளம் பிரதான சுற்று வட்ட தபால் நிலைய சந்தியில் இன்று புதன்கிழமை (20) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் அமைப்பு, விழுது பெண்கள் அமைப்பு மற்றும் சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

படுகொலை செய்யப்பட்ட வித்யாவுக்கு குரல் கொடுப்பதற்காக இனம், மதம் பேதமின்றி அனைத்து இன பெண் சகோதரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

'எத்தனை நாட்களுக்கு தொடரும் இந்த கொடூரம்' , ' பெண்கள் பொம்மைகள் அல்ல ' ,  ' இன்று வித்யா நாளை யார் ' , ' குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் ' , நல்லாட்சியில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்குமா '  போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X