2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வயோதிபரின் சடலம் மீட்பு

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடோல்கலே, சாந்த ஜுட்  படகு தரிப்பிடத்துக்கு அருகிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க வயோதிபரின் சடலம்,  நேற்று வெள்ளிக்கிழமை (22) மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் விமலதிஸ்ஸ தெரிவித்தார்.

கடோல்கலே  பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலை அடுத்தே, குறித்த சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பொலிஸார் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X