2025 மே 07, புதன்கிழமை

முதற்கட்ட வீதி அபிவிருத்திகள் அங்குரார்ப்பணம்

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகருக்கான முதற்கட்ட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்   புத்தளம் மன்னார் வீதி மூன்றாம் குறுக்குத்தெரு சந்தியில் வெள்ளிக்கிழமை (22) மாலை வைபவ  ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் தொகுதியின் ஐ.தே.க.  இலக்கம் ஒன்று பிரதான அமைப்பாளர் அசோகா வடிகமங்கா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

புத்தளம் 05ஆம் குறுக்குத்தெரு, 03ஆம் குறுக்குத்தெரு, நோர்த் வீதி, ஜாவுசன் பள்ளி வீதி மற்றும் வண்ணாங்குளம் வீதி ஆகிய ஐந்து வீதிகளே புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

பிரதேச பொது மக்கள் அசோகா வடிகமங்காவிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலில், வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஐந்து வீதிகளும் புனரமைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் புத்தளம் தொகுதியின் ஐ.தே.கட்சி  இலக்கம் ஒன்று பிரதான அமைப்பாளர் அசோகா வடிகமங்காவ, முன்னாள் நகர சபை தலைவர் சக்ரப் மொஹிதீன், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ், புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சி இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம். ருஸ்தி, அரசியல் பாட விரிவுரையாளர் எம்.அன்வர், புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சி இணைப்பாளர் மொஹிடீன் பிச்சை, நிகழ்வு ஏற்பாட்டாளர் ஆசிரியர் டி.எல்.எம். ரஸீம், சட்டத்தரணி எம்.ஐ.எம். இஸ்னி, கிராம சேவையாளர் எம்.எச்.எம். பவுஸ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X