Sudharshini / 2015 மே 26 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிசுக்கு புத்தளம் பொது நூலகத்தில் திங்கட்கிழமை (25) பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது.
பொது நூலகத்தின் பிரதம நூலகர் நைலா இப்ராஹிம் உள்ளிட்ட அதன் ஊழியர்கள் இணைந்து இந்த பிரியாவிடை நிகழ்வுதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதையடுத்து, முன்னாள் நகர பிதாவுக்கு வழங்கப்பட்ட முதலாவது பிரியாவிடை நிகழ்வு இதுவாகும்.
இந்நிகழ்வில், முன்னாள் நகர சபை தலைவர் தனது குடும்பம் சகிதம் கலந்துகொண்டார். கல்வி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

52 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
4 hours ago