2025 மே 07, புதன்கிழமை

வித்தியாவுக்காக மற்றுமொரு ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 26 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், முஹம்மது முஸப்பிர்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதன் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று செவ்வாய்கிழமை(26) காலை மற்றுமொரு ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்டத்தில் நடைபெற்றது.

புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பாடசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X