Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 26 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரத்மல்யாய பிரதேசத்திலுள்ள பல வீதிகள் சேதமடைந்துள்ளதென ரத்மல்யாய இளைஞர் தொண்டு சேவை அமைப்பினர் விசனம் தெரிவித்தனர்.
குறிப்பாக இப்பிரதேசத்தின் 4ஆம் குறுக்கு வீதி மற்றும் 6ஆம் குறுக்கு வீதி ஆகியன அதிகளவில் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வீதியின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் பலரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக ஒவ்வொரு முறையும் குறித்த வீதிகள் பாதிக்கப்படுவது வழமையாகி விட்டது. எனவே, பிரதேச அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் இணைந்து ரத்மல்யாய பிரதேசத்தின் பாரிய பிரச்சினையாக உள்ள இதற்கு தீர்வு காணவேண்டும் என இளைஞர் தொண்டு சேவை அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago