2025 மே 07, புதன்கிழமை

ஹெரோய்ன் விற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 26 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில்  45 வயதுடைய தாயையும்  அவரது 25 வயதுடைய மகனையும் ஆனமடுவ பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை   கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து 395 மில்லிகிராம் ஹெரோய்னை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்விருவரும் கடந்த பல மாதங்களாக வெளியிலிருந்து ஹெரோய்னை கொண்டுவந்து, ஆனமடுவ பிரதேசத்தில் இரகசியமான முறையில் விற்பனை செய்துவந்துள்ளதாக தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X