2025 மே 07, புதன்கிழமை

மாற்று நிவாரணம் வழங்குமாறு கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இசெட்.ஷாஜஹான்

வாக்குறுதி அளித்தவாறு சகல மீனவர்களுக்கும் மாற்று  நிவாரணம் வழங்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு மீனவ அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை முற்பகல் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின்  நீர்கொழும்பு  மாவட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அரசாங்கத்தால், சிறு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியத்துக்கு பதிலாக மாற்று நிவாரணம் வழங்குவதாக கூறப்பட்டது. இதற்கான மீன்பிடி உபகரணங்களை  நீர்கொழும்பைச் சேர்ந்த சகல மீனவர்களுக்கும்  வழங்குமாறு வற்புறுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக நீர்கொழும்பு மீனவ அமைப்புக்களின் ஒன்றியத்தின் அழைப்பாளர் லெனின் பிரான்ஸிஸ் பெர்னாந்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நீர்கொழும்பில் 1800 சிறு மீன்பிடிப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 800 பேருக்கே மாற்று நிவாரணமாக  மீன்பிடி உபகரணங்களாக வலைகள், படகுகள், என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனையோருக்கு வழங்கப்படவில்லை. அரசியல்  இலாபம் கருதிய நோக்கிலேயே  உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகள் சகலருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின்  நீர்கொழும்பு  மாவட்ட அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் பண்டார தெரிவிக்கையில்,

'மாற்று நிவாரண உதவிகள் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுவதை  மறுக்கிறேன். அன்று இதுதொடர்பாக விண்ணப்பம் செய்யுமாறு அறிவித்தோம். விண்ணப்பித்தவர்களில் 975 பேருக்கு உதவிகள் வழங்க அனுமித கிடைக்கப்பெற்றுள்ளது.

அவர்களில் இதுவரை 515 பேருக்கு மாற்று நிவாரணமாக மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையோருக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும்.

ஏற்கனவே மண்ணெண்ணெய் மானியத்தைப் பெற்றுக் கொண்டவர்கள், படகு வைத்திருப்பவர்கள்,  மாற்று நிவாரண உதவிக்காக விண்ணப்பம் செய்தவர்களே இந்த மாற்று நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதி பெற்றவர்களாவர். இவ்வாறு தகுதி பெறாதவர்களும் விண்ணப்பம் செய்யாதவர்களுமே இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X