2025 மே 07, புதன்கிழமை

மஹிந்தோதய ஆய்வு கூடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஆனந்தா தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த மஹிந்தோதய ஆய்வு கூடம், புதன்கிழமை (27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

புத்தளம் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் கே.ஏ. பாயிஸ் கடந்த ஆட்சியின் போது பல போராட்டங்களுக்கு மத்தியில் புத்தளம் நகருக்கு பெற்றுக்கொடுத்த நான்கு மஹிந்தோதய ஆய்வு கூடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மின்சக்தி, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார கலந்துகொண்டதுடன் விஷேட அதிதியாக புத்தளம் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் புத்தளம் முன்னாள் நகர முதல்வருமான கே.ஏ. பாயிஸ் கலந்துகொண்டார்.

புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தா, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X