2025 மே 07, புதன்கிழமை

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் பாவட்டமடு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த பாலாவி பிரதேசத்தை சேர்ந்த எம்.ஆர்.முஹம்மது சாஜித் (வயது 22) என்ற  இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் தொழில் புரிந்துவந்த இந்த இளைஞர், கடந்த 26ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார்.  இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை  தனது நண்பர்கள் மூவருடன்  மேற்படி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இந்த இளைஞர், பின்னர் கட்டிலிருந்து ஆற்றினுள் பாய்ந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற புத்தளம் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடியதில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X