Sudharshini / 2015 மே 30 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
மியன்மார் நாட்டில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதுக்கு கண்டனம் தெரிவித்து அமைதியான ஆர்ப்பாட்டமும் பேரணியும் புத்தளம் நகர மத்தியில் வெள்ளிக்கிழமை (29); இடம்பெற்றது.
புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பள்ளிக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட இக்கண்டன பேரணி புத்தளம் பிரதான சுற்றுவட்டத்தை தாண்டி குருநாகல் வீதி ஊடாக ஹிஜ்ரி 1400 ஞாபகார்த்த மண்டபத்துக்கு அருகில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் புத்தளம் நலன்புரி அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.எம்.அலி சப்ரி, முன்னாள் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.என்.எம். ஜௌபர் மரிக்கார், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.மு{ஹசி, புத்தளம் செம்மாந்தளுவ பௌத்த மத்திய நிலைய விகாராதிபதி மஹனுவர திலகரத்ன ஹிமி ஸ்ரீ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு தெரியப்படுத்தும் கண்டன தீர்மாணமும் இதன் போது நிறைவேற்றப்பட்டது.


54 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
4 hours ago