2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சிலாபம்- கொழும்பு பிரதான வீதியின் மாரவில கொஸ்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் மாரவில மத்திய கொஸ்வாடிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தவராவார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை மோதிய வேன் அவ்விடத்தில் நிற்காது வேகமாகத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு அப்பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றினை பார்த்து விட்டு, தனது சகோதரி மற்றும் சகோதரியின் 9 வயது மகளுடன் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரி மற்றும் அவரது மகள் ஆகியோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வேன் தொடர்பில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X